கொரோனா இல்லை.. சர்டிபிகேடுடன் வந்தால் தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம்!

thirupathi 2
thirupathi 2

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், கோவிலுக்கு வரும்போது கொரோனா சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பக்தர்களிடம் இருந்து தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுவதுவழக்கம். அதன்படி நேற்று காலை திருமலை அன்னமயபவனில் தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பங்கேற்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகளை கேட்டார். அப்போது அவர் பேசியதாவது,

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 14ம் தேதியில் இருந்து தரிசன அனுமதி வழங்கப்படும்.

கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முழுமையாக வழங்கப்படும். பஞ்ச காவ்யா தயாரித்த பொருட்களை கோவிலில் விற்பனை செய்யவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பசு பாதுகாப்புக்காகப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

அகர்பத்தி, சோப்புகள் போன்ற 15 தயாரிப்புகளையும், ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் 15 தயாரிப்புகளையும் திருப்பதி தேவஸ்தான பஞ்ச காவ்யா பிரிவு விரைவில் தயாரிக்கும். இதற்காக தேவஸ்தான ஆயுர்வேத மருத்துவத்தில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்பே கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்று வர வேண்டும். கொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

திருமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பசுமை ஆற்றலை உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை மட்டுமே அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக 150 மின்சாரப் பஸ்களை இயக்கும் முயற்சியை அரசு போக்குவரத்துக்கழகம் மேற்கொண்டுள்ளது.

தேவஸ்தான அதிகாரிகளுக்கும் மின்சார வாகனம் வழங்கப்படும். தர்மகிரியில் 25 ஏக்கரில் 5 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories