car acc 1 - 2026

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் நேற்று தனது குடும்பத்துடன் காரில் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கொடைரோடு அருகே சடையாண்டிபுரம் பிரிவில் எதிரே வந்த கார் ஒன்று சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற கிருஷ்ணன் என்பவர் மீது மோதி பின் வெள்ளையப்பன் கார் மீது மோதியது.

இதனால் 2 கார்களின் முன்பகுதியும் நொறுங்கி, வெள்ளையப்பன் உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். சாலையை கடக்க முயன்ற கிருஷ்ணன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending