samabanthi 1
1

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே திம்மபூபலபுரம் கிராமத்தில் கன்னி குளம் பகுதியில் ஊரடங்கை மீறி ஒன்றுகூடிய இளைஞர்கள் சமபந்தி போஜனத்தை நடத்தினர் அதனை வீடியோ காட்சிகளாக பதிவிட்டு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பந்தாவாக பதிவேற்றி பக்கத்து கிராமத்தினருக்கு கறிவிருந்தில் வீடியோ காட்டியுள்ளனர் .

ஊரடங்கு 144 தடை உத்தரவையும் மீறும் கறிக்கடைகளுக்கு கூட தடை விதித்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சமூக அக்கறையோடும் வைரஸை ஒழிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் பாடுபட்டுவரும் சூழலில் காவல்துறை உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றுவதை சிந்திக்காத அடங்காத காளையர்கள் கறி விருந்து வைத்து வாழை இலையில் பரிமாறி வெளுத்து வாங்கியதை வீடியோ எடுத்து அதனை வாட்ஸப்பில் ஸ்டேட்டஸில் வைத்தனர் .

தற்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ மற்றும் புகைப்படத்தை வைத்து அதில் உள்ள இளைஞர்கள் யார் யார் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த கறி விருந்து வீடியோவில் இருந்த இளைஞர் பட்டாளத்தின் சிலரை காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அவர்கள் திருவள்ளூர் அருகே உள்ள திம்மபூபலபுரம் கிராமத்தை சேர்ந்த கொக்கி குமாரு இளையபாரதி உள்ளிட்டவர்கள் என்பதை உறுதி செய்து அதில் இருந்த 9 பேர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து எஞ்சியவர்களை பென்னலூர் பேட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending