corono 10 - 2026

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பகுதியை சேர்ந்த 32 வயதான 108 ஆம்புலன்சு டிரைவருக்கு கொரோனா உறுதியானது. அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது பெற்றோர் மனைவி உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர் 108 ஆம்புலன்சை திமிரி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இதனால் அங்கு பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்சில் பயணித்த நோயாளிகள் உட்பட பலரை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending