07 May 11  train

மத்திய அரசு முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் தடங்களில் போக்குவரத்தை சமீபத்தில் தொடங்கியது. முன்னதாக ரயில்வே துறை அறிவித்த 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் தமிழகத்தில் ரயில் சேவை இப்போதைக்கு ரயில் சேவை வேண்டாம் என முதல்வர் எடப்பாடி தெரிவித்தார். ஏனெனில் தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பாதிக்கப்பட்ட எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது.

இந்நிலையில் தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது மேலும் இதற்கான முன்பதிவுகள் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு கூடுதலாக ஜூன் 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதனிடையே தமிழகத்திற்கு A/C இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

அந்தக் கோரிக்கையில் கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதற்கான முன்பதிவுகள் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending