accident

குளித்தலை அடுத்த, கடவூர் பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல், 47; கூலி தொழிலாளி. இவர், தன் அக்கா பாப்பாத்தியுடன் தோகைமலை அடுத்த, கள்ளையில் உள்ள உறவினர் வீட்டு துக்க காரிய சடங்கிற்கு டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார்.

நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், இருவரும் திரும்பி? கொண்டிருந்தனர். தோகைமலை – திருச்சி நெடுஞ்சாலையில், நிலைதடுமாறிய மொபட், அங்கிருந்த பெயர் பலகை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாப்பாத்திக்கு கை முறிவு ஏற்பட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending