கொள்ளையர்களால் பரவிய கொரோனா! தனிமைப் படுத்தப்பட்ட போலீஸார்!

தமிழகம் பொது தகவல்கள்
police

தமிழகத்தில் பாதுகாப்பு பணியிலும் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள பலருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நகைக்கடை திருட்டு விசாரணையில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கொள்ளையன் ஒருவனை கைது செய்தனர். முதலில் பிடிபட்ட கொள்ளையன் கொடுத்த தகவல் மூலம் மற்றொருவனையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் சிறை நிர்வாகத்தினர் நடத்திய சோதனையில் 2 கொள்ளையர்களில் ஒருவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கும் சோதனை நடத்தப்பட்டது. அதில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆறு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.