தமிழகம்- புதிய பரிணாமத்துடன் பரவும் கொரோனா: சுகாதாரத் துறை!

தமிழகம் பொது தகவல்கள்
coronavirus
coronavirus

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸில் புதிய வகையை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால், இதுவரை  31,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் மொத்தமாக 269 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸில் ஏ 1, ஏ2, ஏ3, பி 1, பி2 உள்ளிட்ட வகைகள் இருப்பதாகவும், அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், கொரோனா வைரஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டு கிளேட் ஏ 1 3 ஐ(Glade A 1 – 3 i) என்ற புதிய வகை பரவி வருவதாக தெரியவந்துள்ளது. மற்ற வகை வைரஸ்களை காட்டிலும் இது தீவிரத்தன்மை கொண்டது என்றும் தமிழகம் தவிர தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கிளேட் ஏ 1 – 3 ஐ வகை வைரஸின் தாக்கம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட, இந்த வகையில் வீரியத்தன்மை அதிகம் உள்ளதாகவும், இதனால் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் புதிய வகை வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கிளேட் வகை வைரஸ்கள் தமிழகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் அதிக விகிதத்தில் உள்ளன,

பீகார், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் உள்ளன.

அதே சமயம் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை வைரஸ்கள் மஹாராஷ்ட்ராவிலிருந்து பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.