தமிழ் நாட்டை “அம்மா நாடு” ஆக்கிவிடுவார்கள்: கருணாநிதி

தற்போது “அம்மா” பெயர் இல்லாத திட்டங்கள் ஏதாவது இன்னும் பாக்கி இருக்கிறதா? “டாஸ்மாக்” கடைகளுக்கும் “அம்மா” பெயர் வைக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டிலே ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறதா? சட்டமன்றம் என்ற ஒன்று இருக்கிறதா? அங்கே எதிர்க் கட்சிகள் இயங்க இடம் அளிக்கப்படுகிறதா? அரசை எதிர்த்து யாராவது ஒரு வார்த்தை கூற வாய்ப்பு அளிக்கப் படுகிறதா? கடந்த ஒரு மாதமாக சட்டப்பேரவை நடைபெற்றிருக்கிறது. எந்த அறிவிப்பாக இருந்தாலும் “எனது தலைமையிலான அரசு” என்று பேச்சுக்குப் பேச்சுச் சொல்லிக் கொள்வதிலும், “நான் ஆணையிட்டேன்” என்று தனக்குத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்வதிலும்தான் நேரம் போகிறது. அமைச்சர்கள் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் போதாவது முதல்வர் அவையிலே இருக்கிறாரா?

கடந்த நான்காண்டு காலமாகத் தூங்கி விட்டு, தற்போது பொதுத் தேர்தல் வருகிறது என்றதும் திடீரென்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டுவதாக அறிவித்து, அதுவும் கேலிக் கூத்தாக முடிந்துள்ளது. யாரும் இந்த ஆட்சியை நம்பி – ஆட்சியாளர்களின் வெற்று வார்த்தைகளை நம்பி, தொழில் தொடங்குவதாக இல்லை. ஆனால் ஆட்சி யினரின் கெஞ்சலுக்கு இசைந்து பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதாக ஒருசிலர் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டே நாள் மாநாட்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக அறிவித்தார். கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 26 நாடுகளுக்குப் பயணம் செய்து அதன் மூலமாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சேர்த்துக் கிடைத்த முதலீடே மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய்தான் என்று மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நமது முதலமைச்சர் இரண்டே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீட்டைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

2016ஆம் ஆண்டுத் தேர்தலில் நமக்குத்தான் அதிகப் பொறுப்பு இருக்கிறது. அதை நீங்கள் மறந்து விடக் கூடாது. எதிரிகளின் பண பலத்தையோ, சூழ்ச்சிகளையோ கண்டு பயப்படத் தேவையில்லை. நமது இலட்சியம் மிகத் தூய்மையானது. அது இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்றே தீரும் என்று உங்களுக்குத் தெரிவிப்பதுடன், வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக உறுதியோடு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்கு உண்மையான நிலை இப்போதுதான் புரியத் தொடங்கியிருக்கிறது. புரிந்து கொண்ட மக்கள் நம்மை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். திசை மாறிச் சென்றவர்கள் எல்லாம், தி.மு. கழகமே தமிழகத்தின் நம்பிக்கை என்று தீர்மானித்து, நம் பக்கம் அணி வகுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் நாம் சோம்பியிருந்து விடக் கூடாது. கடமை ஆற்றுவதிலிருந்து நழுவி விடக் கூடாது.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories