‘மீம்ஸ்_க்ரியேட்டர்’களின் ‘கடவுள்’ வடிவேலுவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ‘நேசமணி’ #Nesamani

சற்றுமுன் தமிழகம் துணுக்குகள் நகைச்சுவை லைஃப் ஸ்டைல்

nesamani hashtag - 2026மூன்று தலைமுறை தமிழர்களின் ஒரே நகைச்சுவை வடிகால் வடிவேலுதான்! அந்த வடிவேலுவை திரைத்துறையை விட்டு அகற்றி, தமிழ் ரசிகர்களின் சிரிப்பையும் நகைச்சுவை உணர்வையும் சாகடித்த பெருமை திமுக.,வுக்கும் குறிப்பாக அதன் தலைவராக இருந்த கருணாநிதிக்கும் சேரும்!

வடிவேலு என்ற திரைத்துறைக் கலைஞனின் அஸ்தமனம் அரசியல் கலைஞரால் ஏற்பட்ட போதும், சமூக வலைத்தள விழுதுகள் அந்த ஆலமரத்தை இப்போதும் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கணமும் வடிவேலுவின் கதாபாத்திரத்துடன் வெளியாகும் மீம்ஸ் கிரியேட்டர்களின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. சொல்லப் போனால், பிரதான ஊடகங்களில் பணியாற்றும் கார்ட்டூனிஸ்ட்களும் ஓவியர்களும் பிரமித்துப் போய் வாய்பிளந்து நிற்கிறார்கள்! நம்மை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் அபார கற்பனை! பல மடங்கு பீட் அடித்து எங்கோ செல்கிறார்களே என்று ஆச்சரியத்தால் அதிசயிக்கிறார்கள்.

இந்த மீம் கிரியேட்டர்களின் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் வடிவேலுவின் நேசமணீ! நேசமணிக்கு என்ன ஆச்சு?! இதுதான்!

ஸ்மார்ட் போன் எல்லோர் கைகளிலும் தவழ்கிறது. கற்பனைக்கு உருக் கொடுத்து வடிவேலுவை வடிவம் கொடுத்து உலவ விடுகிறார்கள் இளைய தலைமுறையினர். இன்று சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவர்களில் மீம்ஸ் கிரியேட்டர்களின் பங்கு மிக முக்கியமானது. இவர்கள் உள்ளூர் முதல் உலகத் தலைவர்கள் வரை எவரையும் விட்டு வைப்பது கிடையாது. எந்த நேரம் யார் சிக்குவார்கள் என்பதை கணிப்பதும் சிரமம்தான்!

vadivelu - 2026மீம்ஸ் கிரியேட்டர்களின் ஹீரோ அல்லது கடவுள்.. நம்ம வடிவேலுதான்! டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வரும் மீம்ஸ் அனைத்திலும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு தனி இடம் உண்டு. சினிமாவில் தலைகாட்டாவிட்டாலும் நெட்டிசன்களால் ஒவ்வொரு கணமும் சமூக வலைதளங்களில் உயிர்ப்புடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

அவரது இன்றைய உலாத்தல்… #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்கில்! இது இன்று ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கப் பட்டுள்ளது.

சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில், சுத்தியல் படத்தைப் பதிவிட்டு இதற்கு என்ன பெயர் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர், இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம் என, ஃப்ரண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி பதிலளித்துள்ளார்.

இதை அடுத்து #Pray_for_Neasamani மற்றும் #Nesamani என்ற ஹேஸ்டேக்கில் சுத்தியலை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த இரண்டு ஹேஸ்டேக்குகளும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஒருவர் இன்னும் ஒருபடி மேலே போய்… நேசமணி இட்லி சாப்பிட்டதை சி.ஆர்.சரஸ்வதி புகைப்பட ஆதாரத்துடன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார் என்றும், அவர் மிகவும் விரைவாக குணம் பெற்று வர தீச்சட்டி எடுப்பதாக வேண்டிக் கொண்டிருப்பதாகவும் கூறினார் என ஒரு நிகழ்வியல் உடனான கற்பனையை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.