கிரேஸியின் க்ளாஸ் ஜோக்ஸ்…! சிரிக்கச் சிரிக்க… அட சிரிச்சுட்டுப் போங்கப்பா…!

Published:

Crazy Mohan Kamal - 2026

தமிழ்த் திரையுலகம் தவிர்க்க இயலாத, மறக்க இயலாத க்ளாஸ் நகைச்சுவைக்குச் சொந்தக்காரர் கிரேஸி மோகன். திரை மட்டுமின்றி நாடக மேடைகளில் அட்டகாசச் சிரிப்பொலி அடங்காமல் கேட்கும் வண்ணம் தொடர் நகைச்சுவைகளை விடாமல் கொட்டிக் கொண்டிருக்கும் அருவி கிரேஸி மோகனுடையது!

ஜூன் 10 – அந்த நகைச்சுவை மேதை மறைந்த தினமாகி, கறுப்பு தினமாகிப் போனது.  ஓயாமல் சிரிக்க வைத்த மூச்சு… ஓய்ந்ததும் அழ வைத்தது என்று சொல்லும் வண்ணம் திடீர் இழப்பால் பலரைத் தவிக்கவிட்டுச் சென்றார் கிரேஸி.

இருப்பினும், நகைச்சுவையில் நான் வாழ்வேன் என்று சொல்லியதற்கு இணங்க, அவரது நகைச்சுவைகள் ஓரிரண்டை சுவைத்துப் பார்த்து…  அட  சிரிச்சுட்டு போங்கப்பா… என்று விரக்தியாய்ச் சொல்லும் அளவு வைத்துவிட்டார் கிரேஸி!

கிரேஸியின் சில கிளாஸிக் ஜோக்ஸ்…

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க? மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

இப்ப மருந்து கொட்டிடுச்சி.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா…!!

அய்யோ…!! அப்பறம்?

“சாத்திட்டா”


கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???….


டாக்டர் : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு?

போயும் போயும்j இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு தோணுது டாக்டர்…!


“எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?”

“அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!”


வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!


“தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?”

“நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்”


ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில் கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல ஏழையாயிடுவாரு…!

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

“தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?”

“சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?”


உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img