கனடாவில்… சட்டமன்றத்தில் மீண்டும் தேர்வான தெலுங்கர்!

உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
canada sabha telugu member - 2026
பிரசாத், மனைவி சாந்திஶ்ரீ, மகன் ஹிமனீஷ்

கனடா சட்டசபையில் தெலுங்கர். எண்ணெய் எரிவாயுத் துறை நிபுணராக கனடா சென்ற பிரசாத் இரண்டு முறை எம்எல்ஏவாக வென்றவர். அண்மையில் நடந்த தேர்தலில் அமைச்சராக வெற்றி பெற்றுள்ளார்.

‘பண்டா’ சிவலிங்க பிரசாத் கனடாவில் உள்ள அல்பர்டா மாநிலத்தில் அடிப்படை வசதிகள் அமைச்சராக தேர்வு செய்யபட்டுள்ளார். கால்கரி எட்மான்டன் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக வென்றுள்ளார்.

சென்ற ஏப்ரல் மாதத்தில் நடந்த சாதாரண தேர்தலில் இரண்டாம் முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி அமைச்சர் பதவியை அடைந்துள்ளார். அல்பர்டாவை கடன் தொல்லையிலிருந்து விடுவிப்பதே தன் முதல் பிரதான லட்சியமாக கூறுகிறார்.

அவருடைய வெற்றிப்பாதையை பார்த்தோமானால்… சிவலிங்க பிரசாத்தின் சொந்த கிராமம் குண்டூர் மாவட்டம் தெனாலி மண்டலம் சங்க ஜகர்லமுடி. தாய் தந்தையர் லட்சுமி நரசிம்மா, வேங்கட சுப்பையா. பிரசாத்துக்கு 3 மூத்த சகோதரிகள், ஒரு அண்ணன்.

பிரசாத் உய்யூரில் அண்ணனுடன் தங்கியிருந்து இன்டர், மற்றும் விஜயவாடாவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.

ஹைதராபாதில் ஆல்வின் கம்பெனியின்ன் அந்திர பிரதேஷ் ஸ்கூட்டர்ஸ் லிமிடெடில் ஒரு ஆண்டும் அதன் பின் மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் 1988 இல் இருந்து 16 ஆண்டுகள் பணிபுரிந்தார். உலகிலேயே மிகப்பெரியதான ஜாம்நகர் ஆயில் ரீஃபைனரி கட்டமைப்பில் முக்கிய பாத்திரம் வகித்தார்.

ஆயில் பாதுகாப்பில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது கனடாவிலுள்ள அல்பர்ட் மாநிலம். அதனால் அங்குள்ள சந்தூர் எனர்ஜியில் சேர்ந்த 11 ஆண்டுகள் அனுபவத்திற்குப் பின் அந்த மாநில அரசியல் பக்கம் பார்வையை செலுத்தினார்.

எதிர்க்கட்சியான ஒயில்ட் ரோஸ் கட்சியில் சேர்ந்து கட்சியின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணிபுரிந்தார். அதன்பின் கால்கரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே பொருளாதார அபிவிருத்தி மற்றும் டிரேட் ஷேடோ அமைச்சராக பணிபுரித்தார்.

1919 ஏப்ரல் 16 இல் நடந்த சாதாரண தேர்தலில் கால்கரி – எட்மாண்டனிலிருந்து வெற்றிபெற்ற பிரசாத் அடிப்படை வசதிகள் மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார்.

அந்த தொகுதியில் 75 சதவிகிதம் மக்கள் வெள்ளையர்கள் 16% சீனாவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் இருந்து 2 சதவீதம் மக்கள் கூட இல்லை.

சமீபத்தில் சொந்த கிராமத்துக்கு வந்த பிரசாத், செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆயில் கேஸ் துறையில் நிபுணராக மிக நீண்ட காலம் அங்கு பணிபுரிந்த அனுபவத்தால் உள்ளூர்வாசிகள் தன்னை ஆதரித்தார்கள் என்று சொன்னார். மதம் மொழி இனம் போன்ற வேறுபாடுகளை மக்கள் பார்க்க மாட்டார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வரலாறு திறமை போன்றவற்றை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள் என்று விவரித்தார். தற்போது அந்த மாநிலத்தின் பொருளாதார அமைப்பை சரி செய்வதும் கடன் தொல்லையிலிருந்து விடுவிப்பதும் பட்ஜெட்டை பேலன்ஸ் செய்வதும் தன் வேலையில் முக்கியமானதாக கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.