
அமெரிக்கா வாழ் இந்திய பெண், நியூயார்க் மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளா்ர்.அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகத்தில் உயர் பொறுப்பில் பெருமளவு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட் நீதிபதியாக அமெரிக்கா வாழ் இந்திய வழக்கறிஞரான சரிதா கோமதிரெட்டி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனத்தை கடந்த பிப்ரவரியில் செனட் சபை ஒப்புதலுக்கு டிரம்ப் அனுப்பி வைத்தார்.
இதைடுத்து சரிதா கோமதி ரெட்டி நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.முன்னதாக இவர் அமெரிக்க சட்டத்துறையில் பல்வேறு உயர் பதவி வகித்தவர். டிரம்ப் அரசு நிர்வாகத்தின் அட்டர்னி ஜெனரல் பிரிவின் நியூயார்க் நகர கிழக்கு மாவட்ட குற்றப்பிரிவு துணை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.