கொரோனா: கருப்பாக மாறிய உடல்! 5 மாதம் போராடியும் உயிரிழந்த மருத்துவர்!

Published:

corono

கொரோனா பாதிக்கப்பட்ட டாக்டருக்கு உடம்பில்லொம் கலர் மாறி கொண்டே வந்தது.. கருப்பு கலராக மாறிய நிலையில், சிகிச்சை பலனின்றி டாக்டர் இறந்துவிட்டார்..

சீனாவில் முன்னணி டாக்டர் பெயர் ஹூ வெய்பெங் (கிட்னி ஸ்பெஷலிஸ்ட்) அந்த பகுதி முழுவதும் ஹூ பெயர சொன்னால் அவ்வளவு பிரபலம்.

இந்நிலையில், இவருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதேபோல, இவருடன் வேலை பார்த்த மற்றொரு டாக்டர் யி-பன் டாக்டர் (ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ) என்பவருக்கும் தொற்று உறுதியானது. இருவருமே ஒரே மருத்துவமனையில் பணிபுரிபவர்கள்.

ஒரே நேரத்தில் வைரஸ் தொற்று உறுதியாகவும், இருவருமே சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுக்கு தீவிரமான சிகிச்சை ஜனவரி மாதமே தரப்பட்டு வந்தது.. ஆனால் இவர்களது உடலின் நிறம் கருப்பானது.நிறம் மாறியது கண்டு அங்கிருந்த டாக்டர்களே அதிர்ச்சியானார்கள்..

ஒருகட்டத்தில் டாக்டர் ஹூ வெய்பெங்-கின் உடல்நிலையில் முன்னேற்றம் வந்தது.. இன்னொரு டாக்டர் யி பன் உடல்நிலை தேறி மார்ச் மாதம் டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டுக்கு போய்விட்டார்.

ALSO READ:  FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

ஆனால் டாக்டர் ஹூ வெய்பெங்-கிற்கு ஏப்ரல் மாதம் நிலைமை மோசமாகி விட்டது.. அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், அது முடியாமல் போய்விட்டது.. டாக்டர் ஹூ பரிதாபமாக உயிரிழந்தார். சக டாக்டர்களுக்கு இது அதிர்ச்சியை தந்து வருகிறது.

இந்நிலையில், டாக்டர் ஹூ மரணமடைந்ததால், சீனாவுக்கு பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது.. முதன்முதலில் தோன்றிய வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்த சீனாவால், ஒரு டாக்டரை 4 மாசமாகியும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்கிறார்கள்.

Related articles

Recent articles

spot_img