காரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்!

Published:

vankodumai

நள்ளிரவு நேரத்தில் காரில் போன பெண்ணை வழியில் மடக்கி குழந்தைகள் முன்பு அந்த பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பலரை திகிலடைய செய்துள்ளது

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் தன்னுடைய காரில் குஜ்ரான் வாலாவுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 1 மணிக்கு அந்த கார் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்று விட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து தன்னுடைய உறவினருக்கு போன் செய்தார். அவர்கள் அந்த பெண்ணை அங்குள்ள காவல் உதவி நம்பரை அழைக்க சொன்னார்கள்.

ஆனால அந்த பெண் தான் அந்த நம்பரை அழைத்த போது எந்த பதிலும் இல்லையென்று கூறியுள்ளார் .

இதற்கிடையே அந்த பெண் செய்வதரியாது நடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி, அந்த குழந்தைகள் கண் முன்னாலேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர் .

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

பிறகு அவரின் காரிலிருந்து பணம் மற்றும் வங்கி கார்டுகள் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்து சென்று விட்டார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் இந்த பலாத்காரம் மற்றும் கொள்ளைகள் பற்றி புகார் கூறியதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் 12 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்

Related articles

Recent articles

spot_img