பேய் மாளிகையை விலைக்கு வாங்கி லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் நண்பர்கள்!

Published:

ghost bunglow1
ghost bunglow1

பேய் மாளிகையை விலைக்கு வாங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நண்பர்கள்.

நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாழடைந்த மாளிகையை விலைக்கு வாங்கினார்கள். இப்போது அந்த வில்லா தினமும் லட்சங்களை கொண்டு வந்து கொட்டுகிறது.

2010இல் அவர்கள் 3 கோடியே 22 லட்சம் கொடுத்து ஒரு பங்களாவை வாங்கினார்கள். இப்போது அந்த பங்களா தங்க முட்டையிடும் வாத்தாக மாறியது.

ஒரு ஐடியா… ஒரே ஒரு ஐடியா… அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றியமைத்தது. கோடி கோடியாக ஆதாயத்தை வந்து குவிகிறது.

நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு சிதிலமடைந்த பழைய கட்டிடத்தை விலைக்கு வாங்கினார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டிய அந்த பங்களா சிதிலமடைந்து கிடந்தது. ஆனால் அதுவே இப்போது அவர்களுக்கு அதிர்ஷ்டமாக மாறியுள்ளது.

ghost bunglow2
ghost bunglow2

ஸ்ரீலங்காவை சேர்ந்த டீன் சார்ப் என்பவர் ஒரு இன்டீரியர் டிசைனர். ஒரு காட்டுப் பகுதியில் உபயோகமற்றுக் கிடந்த பழைய கட்டிடம் அவர் கண்ணில் தென்பட்டது. மேலும் மூன்று நண்பர்களோடு சேர்ந்து உடனடியாக அந்த பங்களாவை விலைக்கு வாங்கினார். சிதிலமடைந்து ஊரிலிருந்து தொலைவாக காட்டில் உள்ள கட்டிடத்தை ஏன் வாங்க வேண்டும்.. உபயோகமற்ற வேலை என்று பலரும் கேலி செய்தார்கள்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி ஏன் வாங்கினீர்கள் என்று கேட்டார்கள். அத்தனை பணம் செலவழிப்பது தேவையா என்று அறிவுரை கூறினார்கள். ஆனால் இவர்கள் அதை செவிமடுக்கவில்லை.

இப்போது அதே கட்டிடம் அவர்களுக்கு தங்க முட்டை இடும் வாத்தாக மாறியது.

ஸ்ரீலங்காவிலுள்ள வெலிகாமா என்ற இடத்தில் ஒரு புராதனமான கட்டிடம் இருந்தது. 1912இல் ஒரு செல்வந்தர் தன் மனைவிக்காக கட்டியது. நூறாண்டு வயதுள்ள அந்த பங்களா சிதிலமடைந்து இருந்தது. 2010ல் அதனை விலைக்கு வாங்கிய டீன் சார்ப் அதற்கு ஹலாலகண்டா… Firefly Hills… மின்மினி மலை.. என்று பெயரிட்டு கெஸ்ட் ஹவுஸாக மாற்றினார்.

முதலில் அது பேய் மாளிகை போல் இருந்தது. கட்டடத்தின் கூரையின் மீது மரங்கள் முளைத்திருந்தன. சுவர்கள் விரிசல் விட்டிருந்தன. பங்களாவின் உள்ளே வௌவால்கள் குடியிருந்தன. பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தது.

ghost bunglow3
ghost bunglow3

ஆனால் 2011இல் அதனை டீன் சார்பும் அவருடைய நண்பர்களும் நவீனமயம் ஆக்கினார்கள். அதன் வடிவத்தை முழுவதுமாக மாற்றி அமைத்தார்கள். டீன் சார்ப் சுயமாகவே இன்டீரியர் டிசைனர். ஆதலால் அந்த மாளிகையை மிகவும் நவீனமயமாக கண்ணைப் பறிக்கும் விதமாக மாற்றி அமைத்தார். நவீன சௌகரியங்களை ஏற்படுத்தி அற்புதமான கெஸ்ட் ஹவுசாக அலங்கரித்தார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இந்திர வில்லாவாக அது மாறிப் போனது. இப்போது ஹலாலகண்டா ஃபேமஸ் ஹாலிடே டெஸ்டினேஷனாக பெயர் எடுத்துள்ளது. இந்த கெஸ்ட் ஹவுஸில் 5 பெட் ரூம்கள், 4 பாத்ரூம்கள், ஒரு பெரிய கிச்சன், ஹால், கார்டன் ஏரியா, நீச்சல் குளம் உள்ளது. 12 பேர் வரை சௌகரியமாக தங்கி இயற்கையை அனுபவிக்க முடியும். பச்சை பசேலென்ற காடுகளின் இடையே மிகவும் அழகாக உள்ள இந்த விருந்தினர் மாளிகையில் தங்கிச் செல்வதற்கு சுற்றுலாப்பயணிகள் போட்டியிடுகிறார்கள்.

இங்கு தங்கி எஞ்சாய் செய்வதற்கு சுற்றுப்புறத்திலிருந்து மட்டுமல்லாமல் மிக தூரத்தில் இருந்தும் கூட பயணிகள் வருகிறார்கள். ஆனால் இதில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம். இவ்வாறு ஒரு நாளைக்கு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தோடு டீன் சார்பும் அவருடைய நண்பர்களும் பெருமளவில் ஆதாயம் பெற்று வருகிறார்கள்.

2010இல் அவர்கள் 3 கோடியே 22 லட்சம் செலுத்தி இந்த கட்டிடத்தை வாங்கினார்கள். ஆனால் இப்போது இந்த வில்லா காசு மழை பொழிகிறது. இந்த பேய் பங்களாவை ஏன் வாங்கினீர்கள் என்று முன்பு கேட்டவர்கள் இப்போது டீன் சார்பை பாராட்டுகிறார்கள்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img