4வது டெஸ்ட்.. ஃபாலோ ஆன் பெற்று விளையாடிய ஆஸ்திரேலியா!

உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
australia ind test - 2026

இந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஃபாலோ ஆன் பெற்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 4ம் நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 300 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.. தொடர்ந்து ஃபாலோ ஆன் பெற்று, 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. 4 ஓவர் வீசப்பட்ட நிலையில், விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க இயலாமல், விக்கெட்களை விரைவாக இழந்து வந்தது. நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன் எடுத்திருந்த நிலையில், இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 300 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.

322 ரன்கள் பின் தங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆன் பெற்று, இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்நிலையில், மழை காரணமாக, மோசமான வானிலை மற்றும் வெளிச்சமின்மையால், போட்டி நிறுத்தப் பட்டது. அந்த அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது. நாளை கடைசி நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்களையும் இந்திய அணி கைப்பற்றினால் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வெல்லும். போட்டி டிரா ஆனால் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.