ஆஸ்கர் அவார்ட் வாங்கலையோ ஆஸ்கர் அவார்ட்..!

award 2 - 2026

சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதன் பின்னணி குறித்த தகவலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது.

ஆண்டுதோறும் மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்பைக் கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சர்வதேச பிரபலங்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ‘ஜெய் பீம்’ படத்தை தயாரித்ததற்காக சூர்யா, ஜோதிகா இருவருக்கும் 2021ஆம் ஆண்டின் மதிப்புமிக்க விருது வழங்கப்படவுள்ளது.

இதேபோல நடிகரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021’ என்ற பிரிவில் சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விழா அடுத்த மாதம் 19ஆம் தேதி அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

இந்த அறிவிப்பு ஒருபுறம் இருக்க, இந்த விருது பற்றியும், விருது வழங்குபவர் பற்றியும் சிறப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது, அதாவது, உலகளாவிய சமுதாய ஆஸ்கார் விருது அமெரிக்காவில் வழங்கப்பட உள்ளதாக இருந்தாலும், இந்த விருதை வழங்குபவர் ஒரு தமிழர் என்பதுதான் அந்த சிறப்பு தகவல்.

சமுதாய ஆஸ்கர் விருது குறித்து, சமூக வலைதளங்களிலும், இணையதளத்திலும் தேடிப்பார்த்த பொழுது, மேலும் பல தகவல்களும் கிடைத்துள்ளது.

இந்த விருதை கொடுப்பது VGP என்கிற DR. Vijay G Prabhakar என்ற அமெரிக்க வாழ் தமிழர் ஆவார். AMEC என்கிற அறக்கட்டளை மூலம் விருது கொடுக்கப்படுகிறது.

award - 2026

இந்த விஜய பிரபாகர் தமிழகத்தின் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரபாகர் என்பவரின் மகன். அவர் தாத்தா பெயர் பிளிப், முன்னாள் சேலம் மாவட்ட துணை கலெக்டராக பதவி வகித்தவர்.

விஜய் பிரபாகர் மாமனார் பெயர் நியூட்டன் தேவசகாயம், அவரும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியாவார். மேலும் இந்த விருது வழங்குவதற்கு ஜூரியாக செயல்பட்டவர்களில், Manne Lingaiahஎன்ற ஐ.ஐ.டி சென்னையின் முன்னாள் மாணவரும் இடம்பெற்றுள்ளார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இதன் அடிப்படையில் ஒரு தனியார் அமைப்பால் வழங்கப்படும் விருதை, உண்மையான ஆஸ்கர் அவார்டு போல சித்தரித்துக்கொண்டு, ஒரு கட்சி சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக நெட்டிசன்கள் ட்ரால்ஸ் மூலம் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories