இலங்கையில் குண்டுவெடிப்புகளால் அதிர்ச்சி! 52 பேர் உயிரிழப்பு! 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published:

blast in srilanka - 2026இலங்கையில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர் 300க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்புவில் சர்ச் மற்றும் ஹோட்டல்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இரண்டு சர்ச்சுகள் மற்றும் ஹோட்டல்களில் திடீரென இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. காலை 8 45 மணி அளவில் ஒரு குண்டும் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு குண்டும் வெடித்துள்ளது

கொழும்புவில் உள்ள நெகம்போ நகர்  புனித செபஸ்தியன் சர்ச் மற்றும் கொழும்புவில் உள்ள சென்ட் அந்தோணி சர்ச் ஆகிய இடங்களில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது

அதைத் தொடர்ந்து செபாஸ்டியன் சர்ச் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் எங்கள் சர்ச்சில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது விரைவில் குடும்ப உறுப்பினர்கள் ஓடி வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து மேலும் நான்கு குண்டுகள் வெடித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர் இந்த குண்டுவெடிப்புகள் ஹோட்டல்கள் மற்றும் பட்டி கோலா இடத்தில் உள்ள வேறு ஒரு சர்ச்சில் நிகழ்ந்ததாக போலீசார் கூறியுள்ளனர்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

பட்டிகோலா மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்! கிங்ஸ்பரி என்ற இடத்தில் உள்ள சின்னமோன் கிராண்ட் ஹோட்டல் என்ற இடத்தில் மேலும் ஒரு குண்டு வெடித்தது இது பிரதம மந்திரியின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு அருகில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்! இங்கே நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததாக போலிஸார் தெரிவித்தனர்!

இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் நிலவரை நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அங்கே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய பிரஜைகள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என்று கூறி அதற்கான உதவி எண்களையும் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார்…  +94777903082 +94112422788 +94112422789

 

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img