கோவை காரமடையில் சதுர்த்தியை ஒட்டி 108 திருவிளக்கு பூஜை!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் கோவை
karamadai temple vilakkupoojai - 2026

கோவை மாவட்டம், காரமடை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

காரமடை அருகேயுள்ள சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் இந்து முன்னணி சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா, இந்து ஒற்றுமை பெருவிழா மற்றும் 108 திருவிளக்கு பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காலை 6 மணிக்கு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மாலை 6 மணிக்கு துடியலூர் ஏக்கல் வித்யாலயா சரிதா தர்மவிநாயகம் அவர்கள் மந்திரங்கள் உபதேசம் செய்ய 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

karamadai temple vinayagar - 2026

இந்த திருவிளக்கு பூஜையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சா.ஞானசேகரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பு.கலாமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், விவேகானந்தர் பேரவையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல் உள்ளிட்ட பிராசதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.