குற்றாலத்தில் கொட்டும் அருவி நீர்; குளிக்க அனுமதி!

Published:

courtallamoct7a - 2026

அருவி நீர் கொட்டுகின்ற சூழலில், குற்றாலம் மெயினருவி, ஐந்தருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடித்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் வெள்ளப் பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டிருந்தது. மேலும், ஐந்தருவி,பழையகுற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை சற்று மழை குறைந்து, வானம் வெறிச்சோடியது. இதை அடுத்து மெயின் அருவியில் நீர் வரத்து சற்றே குறைந்தது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப் பட்டது.

courtallamoct7 - 2026

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் (07-10-2018)

பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143அடி
நீர் இருப்பு : 106.10 அடி
நீர் வரத்து : 1199.88 கன அடி
வெளியேற்றம் : 42.25 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 49.28 அடி
நீர்வரத்து : Nil கன அடி
வெளியேற்றம்: Nil

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 84.48 அடி
நீர் வரத்து : 80 கன அடி
வெளியேற்றம்: NIL கன அடி

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு:

பாபநாசம்; 53 மி.மீ
சேர்வலாறு: 12 மி.மீ
மணிமுத்தாறு: 7.20 மி.மீ
ராமா நதி: 60 மி.மீ
கருப்பா நதி: 65 மி.மீ
குண்டாறு: 76 மி.மீ
நம்பியாறு: 5 மி.மீ
கொடுமுடியாறு: 12 மி.மீ
அடவிநயினார்: 51 மி.மீ
அம்பாசமுத்திரம்: 76.20 மி.மீ
ஆய்குடி: 48.40 மி.மீ
சேரன்மகாதேவி: 13 மி.மீ
நாங்குநேரி: 32 மி.மீ
ராதாபுரம்: 9 மி.மீ
பாளையங்கோட்டை: 22 மி.மீ
சங்கரன்கோவில்: 84 மி.மீ
செங்கோட்டை: 61 மி.மீ
சிவகிரி: 21 மி.மீ
தென்காசி: 71 மி.மீ
நெல்லை: 11 மி.மீ

Related articles

Recent articles

spot_img