பத்தாம் வகுப்பு தேர்வு – மனு தள்ளுபடி!

கல்வி சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
exam
exam

பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது. இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்த போது, “தேர்வு தள்ளிப்போனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்துவது நல்லது என்றும், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பத்தாம் வகுப்புத் தேர்வு குறித்து கருத்து தெரிவித்திருந்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உறுதி கூறினார்

தேர்வு எழுத வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் என்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு இடப்பட்டிருப்பதாகவும், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இது குறித்த சுற்றறிக்கை அனுப்பப் பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.