தென்காசி: நெல்லை மாவட்டம், தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
விசுவநாதபுரத்தை சேர்ந்த அஜி (எ) அஜ்மீர் காஜா செரீப் (27), செங்கோட்டையை சேர்ந்த முஸ்தபா கமால் (28), காதர் மைதீன் (எ) சமீர் ஆகிய மூன்று பேர் கைது அவர்களிடமிருந்து ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகை, 1/2 கிலோ வெள்ளி, 4 LED டிவி பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் மாரிச்செல்வி, சிலுவை அந்தோனி, மாரியப்பன், சக்தி, வடிவேல் முருகன், ஆகியோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். .




