நன்றியுள்ள இந்தியனின் உணர்ச்சிகள்… இஸ்ரோவுக்கு 10 வயது சிறுவன் எழுதிய சிலிர்ப்புக் கடிதம்! வைரலாகும் வார்த்தைகள்!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
letter by a boy horz - 2026

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, நன்றியுள்ள இந்தியனின் உணர்ச்சிகள் என்ற பெயரில் உணர்ச்சிகரமான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார், 10 வயதான ஆஞ்சநேயா கௌல் என்ற சிறுவன்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது மகன் எழுதிய இந்தக் கடிதத்தை காஷ்மீரத்தைச் சேர்ந்த அவரின் தாய் ஜ்யோதி கௌல் தனது ட்விட்டரில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது!

சிறுவன் ஆஞ்சநேயா கவுல் முத்து முத்தான கையெழுத்தில் எழுதியுள்ள கடிதத்தில், “நன்றியுள்ள ஓர் இந்தியனின் உணர்வுகள். மனம் தளர்ந்து விடாதீர்கள்! நாம் நிச்சயம் நிலவைத் தொடுவோம். நமது அடுத்த பயணம் சந்திரயான் 3 அதனை அடுத்த ஜூனில் ஏவுவோம்.

ஆர்பிட்டர் இன்னும் அங்கேதான் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். அது நமக்கு புகைப்படங்களை அனுப்பும். அதுதான் நமது அடுத்த சங்கதி.

அடுத்து நாம் எங்கு செல்ல வேண்டும் என்பன போன்றவற்றை அது காட்டும். செடியை நட்டுவிட்டோம் அது வளரட்டும்.

விக்ரம் லேண்டர் ஒருவேளை நிலவில் தரையிறங்கியிருக்கலாம் மற்றும் பிரக்யான் ஆர்பிட்டர் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது. இனி அதிலிருந்து வரும் பட விவரங்களைப் பெறத் தயாராக இருப்போம். அப்படி நடந்துவிட்டால் வெற்றி நமது கைகளில்தான் உள்ளது.

இந்தியாவின் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் தான் உத்வேகம். இஸ்ரோ நீங்கள் எங்கள் பெருமை, நன்றியுள்ள தேசத்தின் இதயபூர்வமான நன்றிகள். ஜெய்ஹிந்த்” என எழுதியுள்ளார்.

https://twitter.com/jytkoul/status/1170218352842661889

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.