
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்பை வரவேற்க இந்திய பிரதமர் மோடி குஜராத்துக்கு இன்று (திங்கட்கிழமை) புறப்பட்டுச் சென்றார்.
இந்தியா வரும் அதிபர் ட்ரம்ப்புடன் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா, ட்ரம்ப் மருமகன் ஜார்ட் குஷ்னர், அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரிகள்ஆகியோர் உடன் வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா வரும் ட்ரம்புக்கு வழக்கப்படும் உணவு வகைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

இந்தியா வந்து சேர்ந்த டிரம்ப் மற்றும் அவர் மனைவி பிரதமரால் வரவேற்கப்பட்டனர்.
அசைவ பிரியரான ட்ரம்புக்கு இந்திய வருகையில் முழுக்க, முழுக்க சைவ உணவுகள் பறிமாறப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகமதபாத்தில் உள்ள பார்ச்சூன் லேண்ட்மார்க் ஹோட்டல் தலைவர் கூறும்போது, ‘டரம்புக்கு வழக்கப்படும் உணவுகளில் குஜராத்தின் உள்ளூர் பாரம்பரிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. சமோசா, ஐஸ் டீ, கீரின் டீ, பிஸ்கட்டுகள் போன்றவையும் அளிக்கப்பட உள்ளன’ என்றார்.
பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையே பாதுகாப்பு, நிர்வாக, ராஜாங்க ரீதியில் நட்புறவுகளை மேம்படுத்த இந்தப் பயணம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Posts by தினசரி செய்திகள்:
- ஆட்சி மாற்றம்; பழம் பெருமையை மீட்டு வரும் மேற்கு வங்கம்!
- பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!
- லால்கிஷன் அத்வானியின் 100வது பிறந்த நாள்: பிரதமர் மோடி கட்டுரை!


