நெல்லை வீரவநல்லூரில் என்.ஐ.ஏ., சோதனை!

சற்றுமுன் தமிழகம் நெல்லை
nia office - 2026

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டில் வேலை பார்த்து உள்ளார் என்று தெரிகிறது.

திவான் முஜிபுர் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் புளியங்குடி பகுதியில் புளியங்குடி பெயின்ட் கடை மைதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.