கொடைக்கானலில் மலர்க்கண்காட்சி தொடக்கம்! கண்ணைக் கவரும் வண்ண மலர்கள் அணிவகுப்பு!

Published:

kodaikanal park4 - 2026 கொடைக்கானலில் 58 வது மலர்க் கண்காட்சியினை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா ,துரைக்கண்ணும், கோடைவிழாவினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் தொடக்கி வைத்தனர் .

20000 கார்னேசன் மலர்களால் உருவாக்கப்பட்ட கிளி , ஒட்டகச் சிவிங்கி உள்ளிட்ட உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது .

kodaikanal park5 - 2026மலைகளில் இளவரசி கொடைக்கானலில் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக  10 நாட்கள் கோடை விழா நடத்தப்படுகிறது!

kodaikanal park3 - 2026இந்த ஆண்டு கோடை விழாவானது  பிரையண்ட் பூங்காவில் 58 வது மலர்கள் கண்காட்சியுடன் துவங்கியது. மலர்க் கண்காட்சியினை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணும், கோடைவிழாவினை வனத்துறை அமைச்சர் சீனிவாசனும் தொடங்கி வைத்தனர்.

கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் துவக்கி வைத்தார் . திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையுரை ஆற்றினார்!

kodaikanal park2 - 2026ஏற்கனவே நடவு செய்யப்பட்ட மலர்ச் செடிகள்100 கும் மேற்பட்ட வகையானவை பூத்துக் குலுங்கும் நிலையில் மேலும் சிற்ப்பு அரங்கில்  சுற்றுலா பயணிகளை கவரும் வகையாக கொடைக்கானலில் பல்வேறு தோட்டங்களில் விளைவிக்கப்பட்ட மலர்கள், காய்கறிகள் , பழ வகைகள் உள்ளிட்டவையும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது . .

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

kodaikanal park1 - 202620000 கார்னேசன் மலர்களால் உருவாக்கப்பட்ட கிளி  , ஒட்டகச்சிவிங்கி, நந்தி உள்ளிட்ட உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகிறது .

காய்கறிகளைக் கொண்டு உருவாக்க‌ப்ப‌ட்ட‌ மும்ம‌த‌ வ‌ழிபாட்டுத் த‌ல‌ங்க‌ளின் உருவ‌மும் வ‌டிவமைக்க‌ப்ப‌ட்டுள்ளது.

kodaikanal park - 2026சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் பூக்க‌ள் முன் புகைப்ப‌ட‌ம் எடுப்ப‌தில் ஆர்வ‌ம் காட்டி வ‌ருகின்ற‌ன‌ர். மூன்று நாட்க‌ள் ந‌டைபெறும் ம‌ல‌ர் க‌ண்காட்சி நாளை ம‌றுநாள் ப‌ரிச‌ளிப்பு விழாவுட‌ன் நிறைவு பெறுகிற‌து. தொட‌ர்ந்து ப‌ல்வேறு க‌லைநிக‌ழ்ச்சிக‌ள், போட்டிக‌ள் 10 நாட்க‌ளுக்கு ந‌டைபெற‌ உள்ள‌து.

Related articles

Recent articles

spot_img