தாகத்துக்கு தண்ணி தேடி வந்த புள்ளிமான்… தெரு நாய் கடித்து உயிரிழந்த சோகம்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்

dear2 dead - 2026கெங்கவல்லி: கெங்கவல்லி பேரூராட்சி அருகே மொட்டைடை பாலம் இடத்தில் மலையடிவாரம் உள்ளது

இந்த மலை அடிவாரத்தில் 5க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் மலையிலிருந்து கீழே இறங்கி தண்ணீர் தேடி வரும். அதேபோல நேற்று காலை தண்ணீர் தேடி வரும் பொழுது 5வயது மதிக்கத்தக்க ஆண் மான் வந்தது.

அப்படி வரும் போது தெரு நாய்கள் அந்த மானை துரத்தி கடித்து குதறின. ஆண் மான் சம்பவ இடத்திலேயே இறந்தது.dear1 - 2026

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தம்மம்பட்டி வனச்சரக அலுவலர் அசோக் குமார் வனக் காவலர்கள் ராமச்சந்திரன் , மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண் மானை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்பு மானை புதைத்தனர். அந்தப் பகுதி மக்கள் கூறும் பொழுது இந்தப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் தண்ணீர் தேடி வருகின்றன. வனத்துறை அதிகாரிகள் மான்களுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.