சபரிமலை செல்ல இன்றும் முயன்று திரும்பிய இரு பெண்கள்! போலீஸார் கைவிரிப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimalai without people3 - 2026

ஒருவர் இருவராகச் சென்றால் போராட்டக்காரர்களால் தடுக்கப் படுவோம் என்ற எண்ணத்தால், பெருங்குழுவாக சபரிமலைக்குச் செல்ல வேண்டும் என்று மகளிர் போராட்டக் குழுக்கள் தீவிர முயற்சி எடுத்தன.

இளம் பெண்கள் கொண்ட ஒரு குழு ஆண் போராளிகளின் துணையுடன் சபரிமலை கோயிலுக்கு சனிக்கிழமை செல்வதற்கு பெருமுயற்சி எடுத்து தயாராக இருந்தார்கள்! மகரவிளக்கு விழாவின் கடைசி நாளான இன்று இந்த முயற்சியை சென்னையை மையமாகக் கொண்ட மனீதி என்ற அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்டார்கள்! அந்தப் பெண்கள் போராளிகளின் குழு நவோதன கேரளம் சபரிமலையிலேக்கு என்ற பேஸ்புக் குழு மூலம் இணைந்து சபரிமலைக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள்

இந்நிலையில் ரேஷ்மா நிஷாந்த் மற்றும் சனிலா சஜேஷ் என இருவரும் இந்தக் குழுவில் இணைந்தார்கள். இதன்படி 20க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தக் குழுவில் இடம் பெற்று சபரிமலைக்கு ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாகச் செல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்திருந்தார்கள்.

ஆனால் சங்க பரிவாரத்தின் குழுக்களால் பாதுகாக்கப்பட்ட சபரிமலை பகுதிக்குள் அவர்களால் வர இயலவில்லை! சபரிமலை மரபுகளை காக்கும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள சங்க பரிவாரத்தின் அன்பர்கள் இந்தப் பெண்களை மலை மேல் செல்ல அனுமதிக்கவில்லை

இதனால் சபரிமலை பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 2 பெண்கள் பாதி வழியில்

தடுத்து நிறுத்தி, போலீஸாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பம்பையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கூடி

போராட்டம் நடத்தியதால் போலீசார் அந்தப்

பெண்களை எச்சரித்து நிலக்கல் முகாமிற்கு

பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா மற்றும் ஷாலினா இரு

பெண்களும் ஒரே மாதத்தில் இருமுறை

சபரிமலை செல்ல முயன்று தடுத்து

நிறுத்தப்பட்டனர் என்றும், ஏற்கனவே இம்மாத துவக்கத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது 2-ஆவது முறையாக மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறப் பட்டது.

இம்முறை அவர்கள் 6 ஆண்களுடன் வந்திருந்தனர். ஆனால் போராட்டம் தீவிரமடைய

வாய்ப்புள்ளதாகவும், பாதுகாப்பு தர முடியாது என கேரள போலீஸார் கைவிரித்ததாலும், அந்தப் பெண்களை எச்சரித்து நிலக்கல் பகுதியில் நிறுத்தி வைத்தனர். இது இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.