புதிய அப்டேட்டுடன் வாட்ஸ்அப்!

தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்
whats app - 2026

உலக அளவில் பலர் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது.

பயன்படுத்த எளிதாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் கொண்டு வரப்படுகின்றன. முதலில் சேட்டிங் ஆப்ஷணை மட்டும் கொண்டிருந்த வாட்ஸ் அப், பிறகு வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் என பல வசதிகளை வழங்கியது.

Whars app - 2026

இந்நிலையில் தற்போது வாய்ஸ் காலிங்கில் அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி கால் வெயிட்டிங் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது.

ஒருவருடன் சாதாரண அழைப்பிலோ அல்லது வாட்ஸ் அப் அழைப்பிலோ பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மற்றொரு வாட்ஸ் அப் அழைப்பு கொடுக்க முடியாது. அந்த அழைப்பு தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும்.

whats up - 2026

ஆனால் தற்போது வேறு அழைப்பில் இருக்கும் போது வாட்ஸ் அப் அழைப்பு வெயிட்டிங் காலாக இருக்கும். இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் வெர்ஷனுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அப்டேட் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.