கார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
thiruvannamalai2 - 2026

கார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது!

கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு மகா தீப கொப்பரை கோபூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை காலை பரணி தீபமும், மாலை கார்த்திகை தீபமும் ஏற்றப் பட வுள்ளது.

thiruvannamalai3 - 2026

முன்னதாக, விவிஐபி., விஐபிக்களுக்கு மட்டுமே கோயிலில் தீபத் திருவிழாவில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

thiruvannamalai1 - 2026

அண்ணாமலையார் கோயிலுள்ளே தீப தரிசனம் பார்க்க மழை நீர் உள்ளே வராமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் கூடாரம் அமைக்கப் பட்டது இந்த முறை பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. கோவில் நிர்வாகத்தின் இத்தகைய செயல்பாட்டை பக்தர்கள் குறை கூறினர்.

-எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.