நாளை முதல் பக்தர்களுக்கு விஜயவாடா கனகதுர்கா தரிசனம்!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
vijayawada kanakadurga
vijayawada kanakadurga
  • ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம். முதலில் ஆன்லைனில் புக் செய்து கொள்ள வேண்டும்.
  • வேத ஆசீர்வாதங்களும் அந்தராலய தரிசனமும் நிறுத்திவைப்பு.
  • பத்தாம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு அனுமதி.

சுமார் 80 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் கனகதுர்க்கை அம்மனை தரிசிக்கப் போகிறார்கள். மத்திய, மாநில அரசாங்கங்களிடம் இருந்து வந்த வழிமுறைகளின் படி கரோனா பரவாமல் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துக்கொண்டு அம்மனை தரிசிப்பதற்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

எட்டாம் தேதி காலை 11 மணிக்கு அம்மன் தரிசனத்திற்கு ஆலய அர்ச்சகர்கள் முகூர்த்தம் குறித்துள்ளார்கள். 8, 9 தேதிகளில் தேவஸ்தான சிப்பந்திகள் மற்றும் அதிகாரிகள் தரிசனம் செய்து கொள்வார்கள்.

10-ஆம் தேதி காலை 6:30 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இருக்கும். ஒவ்வொரு நாளும் காலை 6 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தரிசனம் இருக்கும். அரசாங்க நிபந்தனைகளின்படி ஒரு மணி நேரத்திற்கு 250 பேர் என்ற கணக்கில் ஒரு நாளுக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் அனுமதிக்கப்படும் என்று ஈஓ எம்வி சுரேஷ்பாபு தெரிவித்தார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

அந்தராலய தரிசனம் யாருக்கும் இருக்காது. மல்லிகார்ஜுன மகா மண்டபத்தில் இருந்து மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி கிடைக்கும். பஸ்கள், லிப்ட் வசதிகள் இருக்காது. படி வழியாக மட்டுமே மேலேறி தரிசனம் செய்து கொண்டு திரும்பவும் படி வழியாக கீழே இறங்க வேண்டும். இரண்டு கியூ லைன்கள் மட்டுமே இருக்கும்.

vijayawada kanakadurga
vijayawada kanakadurga

நூறு ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு ஆன்லைனில் புக்கிங் செய்து கொள்ள வேண்டும். இலவச தரிசனம் செய்து கொள்ளும் பக்தர்கள் கூட கட்டாயம் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள வேண்டும். கரெண்ட் புக்கிங் இருக்கும். ஆனால் அப்போது உள்ள கூட்டத்தைப் பொருத்து மட்டுமே கரெண்ட் புகிங் கொடுப்பார்கள்.

விஐபிக்கள் 24 மணி நேரங்களுக்கு முன்பாக ஆலயத்திற்கு வரும்படியாக ஆலயத்துக்கு தெரிவித்தால் அவர்களுக்கு நேரம் ஒதுக்குவார்கள். அந்த நேரத்தில் வர வேண்டி இருக்கும்.

கிருஷ்ணா நதியில் ஸ்நானம் செய்ய அனுமதி இல்லை. தூரம் தூரமாக நின்று நீரை தெளித்துக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அதன்பின் தலைமுடி கொடுக்கும் பகுதியில் பக்தர்கள் சமூக தூரம் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவர் பின் ஒருவராக தலைமுடியை சமர்ப்பித்து மொட்டை அடித்துக் கொள்ளலாம். அங்கு முழுமையான சானிடைசேஷன் செய்வார்கள்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!
panakala narasimha
panakala narasimha

அமராவதி, மங்களகிரி, குண்டூர் ஆலய தரிசனங்கள்:

அரசாங்க உத்தரவு களின்படி திங்கள் கிழமையிலிருந்து ஆலயங்களில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதாக அறநிலையத்துறை அசிஸ்டெண்ட் கமிஷனர் மகேஸ்வர ரெட்டி மற்றும் அமராவதி, மங்களகிரி, பானகால லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி ஆலயம் ஈஓக்கள் சுனில் குமார், மண்டபூடி பானகாலராவு தெரிவித்தனர். அந்தந்த ஆலயங்களின் ஈஓக்கள் சனிக்கிழமை இது குறித்து பேசினார்கள்.

அமராவதியில் ஒவ்வொரு நாளும் காலையில் 6 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரையும் மாலை நான்கிலிருந்து ஏழு மணி வரையும், மங்களகிரி உயர் சந்நிதியில் காலையில் 7லிருந்து மதியம் மூன்று மணி வரையும் தரிசனம் இருக்கும் என்று தெரிவித்தார்கள்.

பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து அடையாளக் கார்டு போன் நம்பர் தேவாலய அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஜலதோஷம் இருமல் ஜுரம் போன்ற பிரச்சனைகள் உள்ள பக்தர்கள், கர்ப்பிணிகள் முதியோர்கள், 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தேவாலயங்களில் அனுமதி இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
vijayawada kanakadurga
vijayawada kanakadurga

பக்தர்களுக்காக சானிடைசர்கள் வசதி ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்கள். டிக்கெட் வாங்கும்போது லைனில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்கள்.

அமராவதியில் அந்தராலய தரிசனம், ஆர்ஜித சேவைகள், அர்ச்சனைகள், மந்திர புஷ்பம், தீர்த்தம், சடாரி, சேஷ வஸ்திரம் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள். லகு தரிசனம், மஹா லகு தரிசனம் மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது.

மங்களகிரியில் இலவச தரிசனத்தோடு சீக்கிர தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார்கள். மேலே உள்ள மற்றும் கீழே உள்ள சந்நிதிகளோடு காட்ரோடு மேல் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம், ஸ்ரீகங்கா பிரமராம்பா சமேத மல்லேஸ்வர சுவாமி ஆலயங்களில் கூட பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.