நாயொன்று குறுக்கே போச்சு நானும்ப்ரேக் மிதிக்க லாச்சு வள்ளென்று கத்தி விலகிப் போச்சு திக்கென்று நெஞ்சு துடிக்க லாச்சு! நாயில்லா சாலை வாய்ப்பும் இல்லை நாய்போலே குறுக்கிடா மாந்தரும் இல்லை பிரேக்ஒன்று இருப்பதாலே விபத்தும் இல்லை தடைசிறிது வருவதாலே தளர்வும் இல்லை!
