சைவ சமயத்தில் மொழிப்போர் – நூல் வெளியீட்டு விழா
சங்கரன்கோவில்: சைவ சமயத்தில் மொழிப்போர் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா, வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் நடக்க உள்ளது.
திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக, சைவ சமயத்தில், தமிழா வடமொழியா என்ற மொழிப்போர் உருவானது. அதன் விளைவாக, தமிழர்ச்சனை இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம், அதன் அரசியல் பின்னணி குறித்து, சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை எழுதிய சில நூல்களும் கட்டுரைகளும், ‘சைவ சமயத்தில் மொழிப்போர்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூலின் வெளியீட்டு விழா, வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் நடைபெற உள்ளது.
இதில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள் தலைமை தாங்கி, நூலின் முதற்படியை வெளியிடுகிறார்.
சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபையின் தலைவர் சுப்பிரமணியன், திருநெல்வேலி தெற்கு மடத்து அதிபர் சிவஸ்ரீ கணபதி சுப்பிரமணிய சிவாச்சார்யார், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயாவின் ஆசிரியர் சிவஸ்ரீ க. கார்த்திகேய சிவாச்சார்யார் ஆகியோர் நூலின் முதற்படியைப் பெறுகின்றனர். நுாலின் தொகுப்பாசிரியரும் ஊடகவியலாளருமான சொக்கலிங்கம் ஏற்புரை வழங்குகிறார்.
நூல் வெளியீட்டு விழா
‘சைவ சமயத்தில் மொழிப்போர்’
(சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளையின் சில நூல்களும் கட்டுரைகளும் – 50ஆவது நினைவு ஆண்டு வெளியீடு)
நாள்: 14 – 11 – 21, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6 மணி
இடம்: திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடம், மேலரத வீதி, சங்கரன்கோவில்
நூல் வெளியிடுவோர்: ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், பெருங்குளம்
சைவப் பெருமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டுகிறோம்!