நெல்லை பல்கலை., தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைப்பு!

கல்வி சற்றுமுன் நெல்லை
manonmaniam sundaranar university - 2026

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன மழை பெய்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப் பட்டனர். பல இடங்களில் நீர் தேங்கியது. இந்நிலையில், இன்று காலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவிப்பு வெளியிட்டார்.

இதனிடையே, இன்று நெல்லை மனோன்மணீயம் பல்கலைக் கழகப் பருவத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள் ஆகியவை தொடங்குகின்றன. இந்நிலையில் கனமழை விடுமுறை அறிவிக்கப் பட்டதால், இன்று நடைபெற இருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக, பல்கலைக்கழகம் அறிவித்தது.

இன்று பல்கலைக் கழகம் செயல்பட்டாலும், பல்கலை.,யைச் சேர்ந்த உறுப்புக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.