telangana locabody election defeater collecting money - 2026

தெலங்கானாவில், உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் 269 போட்டிகளுக்கு 24 ஓட்டுகளே பெற்ற ஹிமாவதி என்ற பெண் தோல்வியடைந்தார் அவருக்கு ஓட்டு போடுவதற்காக அவரது கணவர் ரூபாய் 500 முதல் 700 வரை கொடுத்து வந்துள்ளார் தோல்வியடைந்த நிலையில் அந்த பணத்தை திரும்ப கேட்டு கணவர் டார்ச்சர் செய்து வருகிறாராம் இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

தெலங்கானா மாநிலத்தில் மனைவி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார். அதற்காக கணவர் ஒவ்வொருவரிடமும் சென்று பணம் கொடுத்து வந்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் பணம் கொடுக்கும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அண்மைக் காலங்களில் தமிழகத்தில் திருமங்கலம் ஃபார்முலா என்று பெயரிடப்பட்ட இந்த உத்தி இப்பொழுது இந்தியா முழுவதும் பரவி விட்டது

தமிழகத்தில் திருமங்கலத்தில் திமுக வின் அழகிரி தொடங்கி வைத்த இந்த உத்தி இப்பொழுது இந்தியாவில் பரவலாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் வியாபாராம மாறியிருக்கிறது! தெலங்கானாவில் சூரிய பேட்டை மாவட்டத்திலுள்ள ஜெய்ரெட்டிகூடம் என்ற கிராமத்தில் ஜனவரி 25ஆம் தேதி உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில் பிரபாகர் என்பவரது மனைவி ஹைமாவதி என்பவர் தேர்தலில் போட்டியிட்டார். கிராமத்தில் மொத்தம் 269 ஓட்டுகள் உள்ளன இவற்றில் வெறும் 24 ஓட்டுகளே பெற்று அவர் தோல்வி அடைந்தார்!

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

தேர்தலுக்கு முன்னதாக இவர்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் 500 முதல் 700 ரூபாய் வரை கொடுத்துள்ளனர். ஆனால் ஹிமாவதியை கிராமத்தினர் தேர்ந்தெடுக்கவில்லை! இந்நிலையில் அவரது கணவர் பிரபாகர் கிராமத்தினரிடம் சென்று நாங்கள் கொடுத்த பணத்தை திரும்பக் கொடுங்கள் என்று வற்புறுத்தி கேட்டு வருகிறார்!

அண்மைக்காலமாக முதல் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வேட்பாளரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளும் வாக்காளரின் போக்கு கவலையளிப்பதாகவே உள்ளது. இது குறித்த வீடியோவில் பிரபாகர் கிராமத்தினரிடம் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு வாக்குவாதம் செய்கிறார் ஆனால் கிராமத்தினரும் அதை கேட்டு மறுத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகின்றனர்! தங்களிடம் பணம் இல்லை என்றும் திருப்பிக் கொடுக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்

இதனை ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் இது ஓட்டா அல்லது ஏலமா என்று சிலர் அவரிடம் கேள்வி கேட்கின்றனர்! சிலரிடம் கைகளை கட்டிக் கொண்டு மண்டியிட்டு கதறுகிறார் அவர். நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று! ஒரு சிலர் மீண்டும் தருவதாக ஒப்புக் கொண்டாலும் தற்போது எங்களிடம் பணம் இல்லை என்று கூறிவிடுகின்றனர். பலரும் முடியாதுஎன்று மறுத்து விடுகின்றனராம். பஞ்சாயத்து தேர்தலின் கடைசிக் கட்ட தேர்தல் ஜனவரி 30-ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது!

ALSO READ:  மதமாற்ற விவாதம் … மீண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending