கால்நடைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி; அவசர உதவி எண்.1962 முதல்வரை பாராட்டும் பொதுமக்கள்.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
AMBULACIE VERNARI - 2026

தமிழகத்தில் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி… முதல்வர் திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு.!!

தமிழகத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் அவற்றுக்கு சாதாரண சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை மேற்கொள்ளக் கூடிய நவீன வசதிகள் கொண்ட அம்மா ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலக அதிகாரி சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த இந்த ஆம்புலன்ஸ் சேவையானது கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது 1962 என்ற இலவச எண்ணை அழைத்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து கால்நடைக்கு சிகிச்சை அளிக்கவும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை அளிக்கவும் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 10 ஆம்புலன்ஸ்கள் தமிழகத்தில் இயங்கிவரும் நிலையில் இன்று கூடுதலாக 22 ஆம்புலன்ஸ்களைத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் இந்த திட்டமானது விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்பாளா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.