
திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்களுக்கு எதிராக இன்று தில்லி மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு ஏராளமான காவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக தில்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று (நவ.2) தில்லியில் உள்ள திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் காவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பில் சென்றது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

இந்த வன்முறையில் தில்லி வடக்கு இணை காவல்ஆணையர், 2 காவல் நிலையங்களின் கண்காணிப்பாளர்கள் உள்பட 20 காவலர்கள் காயம் அடைந்தனர். இதேபோல் வழக்கறிஞர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு வழக்கறிஞர்கள் காவலர் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தனர். ஒட்டுமொத்தமாக சுமார் 50 பேர் காயம் அடைந்தனர்.
பிற்பகல் 2 மணி அளவில் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 12 மோட்டார் சைக்கிள்கள், சிறைக்கைதிகளை ஏற்றிச்செல்லும் 8 வாகனங்கள், வழக்கறிஞர்கள் அமரும் இருக்கைகள், வழக்கறிஞர்கள் கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதேபோல் நீதிமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீபிடித்து எரிந்தது.
காவல்ர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த இந்த கலவரம் தில்லி மாநகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த கலவரம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்பி கார்க் தலைமையில் விசாரணை குழு அமைத்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர்களின் வாக்குமூலத்தை ஏற்று உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று தில்லி காவல்துறை ஆணையருக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பார்கவுன்சிலுக்கு நோட்டீசும் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நேற்று காவலரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஏராளமானோர் உச்ச நீதிமன்றம் நோக்கி ஊர்வலம் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்களுக்கு எதிராக இன்று தில்லி காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கான காவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காக்கி சட்டை அணியாமல், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் நீதி வேண்டும், நீதி வேண்டும் என்று போராடி வருகிறார்கள். தங்களை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை உயர் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்று வருகிறார்கள். காவலரின் போராட்டம் காரணமாக தில்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Delhi: Police personnel hold protest outside Police Head Quarters (PHQ), against the clash that broke out between police & lawyers at Tis Hazari Court on 2nd November. pic.twitter.com/ObM3nFcVgF
— ANI (@ANI) November 5, 2019
Delhi: Police personnel hold protest outside Police Head Quarters (PHQ), against the clash that broke out between police & lawyers at Tis Hazari Court on 2nd November. pic.twitter.com/FRthXQTk0T
— ANI (@ANI) November 5, 2019
#WATCH Delhi: Police personnel raise slogans of "we want justice" outside the Police Head Quarters (PHQ) in ITO. They are protesting against the clash that broke out between police & lawyers at Tis Hazari Court on 2nd November. pic.twitter.com/XFAbQn2gay
— ANI (@ANI) November 5, 2019