முதலிடம் பிடித்த தமிழகம்! மத்திய அரசின் பட்டியல்!

தமிழகம் பொது தகவல்கள்
tamil nadu - 2026

பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் அடிப்படையில், நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு நிர்வாகத்திறன் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில், நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

2வது இடத்தில் மஹாராஷ்டிரா, 3வது இடத்தில் கர்நாடகா, 4வது இடத்தில் சத்தீஸ்கர், 5வது இடத்தில் ஆந்திரா, 6வது இடத்தில் குஜராத், 7 வது இடத்தில் ஹரியானா, 8 வது இடத்தில் கேரளா 9வது இடத்தில் மத்திய பிரதேச, 10வது இடத்தில் மே.வங்கம், 11வது இடத்தில் தெலுங்கானா, 12வது இடத்தில் ராஜஸ்தான், 13வது இடத்தில் பஞ்சாப், 14வது இடத்தில் ஒடிசாவும், 15வது இடத்தில் பீஹார், 16வது இடத்தில் கோவா, 17 வது இடத்தில் உ.பி., 18 வது இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளன.

மேலும், பொது மக்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம், முதலிடத்தையும், பொது சுகாதாரத்துறையில் 2வது இடத்தையும், சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும், வேளாண்மையில் 9வது இடத்தையும், வணிகத்தில் 14வது இடத்தையும், மனித வள மேம்பாட்டில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பெரிய மாநிலங்கள் பட்டியலில், பொருளாதார துறையில் 5வது இடத்தையும், நீதி, சட்டம் ஒழுங்கு, பொது மக்கள் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும், நல்லாட்சி நடக்கும் மாநிலங்களிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.