மீம்ஸ்தானே..! போடுங்க… என்ஜாய்! அதிர வைத்த மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi tweet - 2026

மீம்ஸ்தானே…!? போடுங்க! அதனை வரவேற்கிறேன். ரசித்து மகிழலாம் என்று கூறி தனது டிவிட்டர் பதிவில் கலகலக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

டிச.26 வியாழக்கிழமை இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதனை நாடு முழுவதும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இதனை பிரதமர் மோடியும் ரசித்துப் பார்த்து, தனது கருத்துகளை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மற்ற இந்தியர்களைப் போல், சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு நானும் ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். ஆயினும் மேகக் கூட்டங்கள் மறைத்திருப்பதால் தன்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார். அதுகுறித்து ஸ்டைலிஷாக மூன்று படங்களையும் பதிவு செய்திருந்தார்.

பிரதமர் மோடியை கலாய்ப்பதற்கு என்றே டிவிட்டரில் சிலர் தங்கள் நையாண்டிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி குறித்த மீம்ஸ்களும் அதிகம். முன்னர் மகாபலிபுரத்தில் கடற்கரையில் குப்பையைக் குனிந்து எடுத்து சேகரித்துக் கொடுத்த படத்தை இணையதள வாசிகள் அதிகம் கேலி செய்தனர்.

இந்நிலையில், கறுப்பு வண்ண கூலிங் கண்ணாடி அணிந்து, கையிலும் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக சிறப்பு பாதுகாப்பு கண்ணாடி வைத்துக் கொண்டு மேலே வானத்தை நிமிர்ந்து பார்த்தபடி இருக்கும் மோடியின் படத்தினை ஷேர் செய்து, இது அனேகமாக மீம்ஸ் ஆகும் என்று கேலி செய்திருந்தார்.

அந்தப் படத்தினை பகிர்ந்துள்ள மோடி, மோஸ்ட் வெல்கம்… என்ஜாய் 🙂 என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பலரும் ரிடிவீட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.