கொரோனா வைரஸ் தாக்குதல்! தமிழக – கேரள எல்லையில்… உஷார் நடவடிக்கை!

சற்றுமுன் தமிழகம் நெல்லை மதுரை லைஃப் ஸ்டைல்
coronaviruskerala - 2026

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழ்நாடு-கேரள எல்லையில் மருத்துவக் குழுவினர் சோதனைகள் செய்து வருகின்றனர். தமிழகம் வரும் வாகனங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப் பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், தமிழ்நாடு-கேரளா எல்லையில், தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளான கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி, லோயர்கேம்ப் பேருந்து நிலையம், போடிமெட்டு ஆகிய பகுதிகளில், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி பகுதியில், புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் தலைமையிலும், லோயர்கேம்ப் பகுதியில், கூடலூர் சுகாதார களமேற்பார்வையாளர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கேரளாவிலிருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், வாகனங்களுக்கு, கிருமி நாசினி மருந்து அடிக்கப்படுகிறது

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி அருகில் கொரோனா வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் சங்கரன்கோவில் சுகாதார மாவட்ட அலுவலர் தலைமையில் விழிப்புணர்வு நேட்டீஸ் கொடுக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.