‘அதுக்கு’ ரூ.500 தான் ரூ.50 க்கு கட்டாது! கறார் பேசிய பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன்!

சற்றுமுன்
murder - 2026

17 வயது சிறுவன் ஒருவன் 35 வயது பெண் ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தெற்கு ரயில்வே காலனி குவார்ட்டர்ஸ் பகுதியில் இளம் பெண் ஒருவரின் முகம் சிதைக்கப்பட்டு, நிர்வாணமான நிலையில் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் 17 வயது சிறுவன் ஒருவனின் பெயர் அடிபட்டதை அடுத்து அந்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அந்த சிறுவன் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கேன்டீனில் வேலை பார்த்துவந்த நிலையில் அந்த பகுதியில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம், இரவு நேரத்தில் சிலர் பணம் கொடுத்து பாலியல் உற்வில் இருந்து வந்ததை கவனித்துவந்துள்ளான்.

இதை பார்த்த அந்த சிறுவனுக்கும் அந்த பெண்ணுடன் அப்படி இருக்க ஆசை வந்துள்ளது.

இதனால், தன்னிடம் இருக்கும் 50 ரூபாய் பணத்தை காட்டி அந்த பெண்ணை ரயில்வே காலனி குவார்ட்டர்ஸ் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு சென்றதும், பாலியல் உறவிற்கு அந்த பெண் 500 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால், தன்னிடம் 50 ரூபாய்தான் இருப்பதாக சிறுவன் கூறியதும் அந்த பெண் மறுத்துள்ளார்.

மேலும், நீ சிறுவன் என்பதால் உனது பெற்றோரிடம், போலிஸாரிடமும் கூறிவிடுவதாக அந்த பெண் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் கல்லை போட்டு அந்த அந்த பெண்ணை கொலை
செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.