அரசியலப் பத்தி எதுவும் கேக்காதீங்க: ரஜினி டென்ஷன்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

rajinikanth3 - 2026

சென்னை:

சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த மூன்று தினங்களாக ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அவ்வப்போது பேசவும் செய்தார்.

அவருடைய பேச்சு, அரசியல் குறித்து இருந்ததால் கடந்த ஓரிரு நாட்களாக அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறிக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர் தனிக்கட்சி தொடங்கினால் ஆதரவளிப்போம் என்று சில பெரும்புள்ளிகள் ஆலோசனையை வழங்கினர். இது குறித்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் ஊகங்கள் பல பரவின. நேற்று தனது பேச்சின் போது, பாஜக.,வில் இணைவீர்களா என்று கேட்ட கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று மழுப்பலாகக் கூறிச் சென்றார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்,

ரசிகர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது; ரசிகர்கள் தங்களது குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்; அரசியல் பற்றி எதையும் கேட்க வேண்டாம் என்று தெளிவாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.