பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மகளிர் தினம் எதற்கு? சின்மயி ஆவேசம்!

சினி நியூஸ் சினிமா பொது தகவல்கள்
chinmayee - 2026

தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசிரியராக இருக்கும் வைரமுத்து மீது, பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து பல்வேறு பாலியல் புகார்களை அவ்வப்போது கூறி வருகிறார். இதனிடையே, டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன், நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். பெண்களுக்கான நியாயம் கிடைக்க எப்படி போராட வேண்டி இருக்கு என்று சமீபத்தில் நெட்டிசன் ஒருவர், பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சின்மயி, ‘இது என்ன பிரமாதம், பாடலாசிரியர் வைரமுத்து மீது 13க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நான் அளித்த புகாரால் ராதாரவி என்னை டப்பிங் யூனியனிலிருந்து பிரமாதமாக வேலைசெய்து வெளியேற்றினார்.

Vairamuthu 1 - 2026

அதுமட்டுமா? பாலிவுட் இசையமைப்பாளர் அனு மாலிக் பொதுஇடத்தில் வைத்தே 6 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாடகர் கார்த்தி, சுவிட்சர்லாந்து பாடகியுடன் சேர்த்து 7 பெண்களிடம் அத்துமீறியுள்ளார். இவர்களின் வரிசையில் கைலாஷ் கெர், ரகு தீக்‌ஷித் என பலர் உள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில்,நம் நாட்டில் மகளிர் தினத்தன்று தான் பெண்களை போற்றுகிறார்கள். மற்ற நாட்களில் மதிப்பது கூட இல்லை. அப்படிப்பட்ட மனநிலையில் தான் ஆண் மிருகங்கள் இருக்கின்றன. பாதுகாப்பை உறுதி செய்யாமல் மகளிர் தினம் கொண்டாடி என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.