கல்வீச்சு மற்றும் ஆசிட் வீச்சுகளிலிருந்து காக்கும் வகையில் பெண் சிஆர்பி பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை…..!

CRFP - 2026

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் அடிக்கடி கல்வீச்சு சம்பவங்கள் நடக்கிறது. அங்கு பாதுகாப்பு பணியில் சுமார் 300 பெண்கள் சி.ஆர்.பி.எப். படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மகிளா பட்டாலியன் படை பிரிவில் 10 ஆயிரம் பெண்களும், விரைவு படையில் 2 ஆயிரம் பெண்களும் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் பாதுகாப்பு பணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களை தடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஸ்ரீநகரில் அடிக்கடி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடக்கும்போது போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் பாதுகாப்பு படையினா் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதால் சிஆர்பிஎப் படையினர் அதிக அளவில் காயம் அடைந்து வருகிறனா்.

சில சமயங்களில் அதனால் வீரர்கள் உயிரிழப்பு சம்பவங்களும் நடப்பதுண்டு அவ்வாறு நடைபெறும் கல்வீச்சினால் ஏற்படும் காயத்தில் இருந்து தப்பிக்க சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை வழங்கப்படுகிறது.

இதையடுத்து கல்வீச்சில் காயத்தில் இருந்து தப்பிக்க மத்திய பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு வசதி கொண்ட உடை தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பெண் போலீசார் தேசிய மாநாட்டில் நவீன பாதுகாப்பு உடை குறித்து வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் இன்ஸ்டிடியூட், மத்திய பெண் போலீசாருக்கு பாதுகாப்பு உடைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பெண்களுக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு உடை வடிவமைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது.

சி.ஆர்.பி.எப். பெண் போலீசாருக்கான நவீன பாதுகாப்பு உடையை சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஆர்.ஆர். பத்பூகர் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.

இது குறித்து ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் நிறுவன இயக்குனர் புவனேஷ்குமார் கூறியதாவது:-

இந்த நவீன பாதுகாப்பு உடையானது உடலில் விலா எலும்பு பகுதி, கைகளின் பின்புறம், தொடை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த உடை கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் பெண் போலீசாருக்கு உதவியாக இருக்கும். பாதுகாப்பு உடை 6 கிலோ எடையில் இருக்கும்’ என்றார்.

சி.ஆர்.பி.எப். ஐ.ஜி. அனுபம் குல்ஸ்ரஸ்தா கூறும்போது, ‘நவீன பாதுகாப்பு உடை கத்திக்குத்தில் இருந்தும், ஆசிட் வீச்சில் இருந்தும் தப்பிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது முன்மாதிரி உடைகள் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

விரைவில் நிறைய நவீன பாதுகாப்பு உடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம். ஏற்கனவே ஆண்களுக்கு நவீன பாதுகாப்பு உடை தயாரிக்கப்பட்டு வருவதால் பெண்களுக்கும் தயாரிப்பதில் எளிதாக இருக்கும்’ என்றார்.

சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. மோசஸ் தினகரன் கூறும் போது, ‘பெண்களுக்கான பாதுகாப்பு உடை அனைத்து அளவிலும் தயாரிக்கப்படும். மத்திய ரிசர்வ் படையில் ஆண் போலீசார் பயன்படுத்தும் பாதுகாப்பு உடையில் உள்ள அதே தரத்தில் உருவாக்கப்படும்.

இந்த உடை கலவரங்களை கட்டுப்படுத்த பெண் போலீசாருக்கு உதவியாக இருக்கும். நவீன பாதுகாப்பு உடை அதிக அளவில் தயாரிக்கப்பட்ட பிறகு மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் மாநில போலீஸ் படை பிரிவினருக்கும் வழங்கப்படும்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories