பம்பா ஆற்றில் வெள்ளம்; கனமழையால் கேரளாவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

IMG 20190720 WA0006 - 2026

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று கண்ணூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லர்குட்டி அணையின் மதகு திறக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை காரணமாக, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர்.

பம்பை ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

kerala - 2026கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும் வகையில், காசர்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாளும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.