
கரூர்: மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் சென்று முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இளைஞர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரவக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட கொத்த பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாம்மாள் வயது 60. இவர் நேற்று வீட்டின் அருகே இருந்தபோது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த டிப்டாப் இளைஞன் ஒருவன் கமலாம்பாள் இடம் விலாசம் கேட்பது போல் நடித்து, அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தான் .
சம்பவம் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து சம்பவம் குறித்து கமலாம்பாள் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



