அசுரன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி தமிழில் அறிமுகமாகிறார்.
‘பேட்ட’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடாமல் இருந்த கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது.
இந்தப் படம் மூலம், தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில் நடித்த ‘மாயநதி’ ‘வரதன்’ ஆகியப் படங்கள் பெரும் வெற்றியடைந்தன.
அதோடு சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பார்வதி, நஸ்ரியா, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன், மடோனா செபாஸ்டியன் , அமலா பால், மஞ்சு வாரியர் வரிசையில் தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ள மலையாள கதாநாயகி ஐஸ்வர்யா லஷ்மி.
இப்படத்தை ‘ஒய் நாட் ஸ்டூடியோஸ்’ சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதன் படபிடிப்புகள் தொடங்க உள்ளது. கொடி, வடசென்னை, படத்தை தொடர்ந்து, தனுஷும் சந்தோஷ் நாராயணனும் இப்படத்தில் மீண்டும் இணைகின்றனர்.
‘ஜில் ஜங் ஜக்’, ‘அவள்’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.படம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், “என் மனதுக்கு நெருக்கமான கதையை படமாக்கி உங்களிடம் சமர்ப்பிக்க ஆவலாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இந்தப் படம் முழுக்க வெளிநாட்டில் நடக்கும் கதையைக் கொண்டது என்பதால், தற்போது முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்ட படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அடுத்தபடியாக இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார்.



