ஊரடங்கு: தனிமையில் இருந்த கண் பார்வையற்ற பெண்மணிக்கு நேர்ந்த விபரீதம்!

இந்தியா பொது தகவல்கள்
van kodumai 1 1 - 2026

பால்கனி வழியாக எகிறி குதித்து, கண் பார்வை இல்லாத 53 வயது பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார் மர்ம நபர் ஒருவர்.. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஷாபுரா பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருக்கிறார் 53 வயது பெண்.. அரசு வங்கியில் மேனேஜராக இருக்கிறார்.. இவர் கண் பார்வையற்றவர்.. தற்போது லாக்டவுன் இருப்பதால் அப்பெண்ணின் கணவர் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கி கொண்டுள்ளார்.. அதனால் தனியாக ஃபிளாட்டில் வசித்து வந்துள்ளார்..

இந்நிலையில், அதிகாலை மர்ம நபர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்தாக கூறப்படுகிறது.. கண்பார்வை அற்ற நிலையில் அந்த கத்தி கூச்சலிட்டுள்ளார்.. அதனால் அக்கம்பக்கத்தினர் திரண்டுவர ஆரம்பித்தனர்.. இதனால் பதறி போன அந்த மர்ம நபர், அப்பெண்ணின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.

அதேசமயம், அந்த பகுதியில் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.. தப்பி சென்ற மர்ம நபர் யார் என தெரியவில்லை.. விடிகாலை நேரத்தில் இப்படி அபார்ட்மென்ட்டுக்குள் வந்தார் என்றும் போலீசார் குழம்பி உள்ளனர்.. குற்றவாளி குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவும் இல்லாமல் திணறி வருகின்றனர்.

ஆனால், அந்நபர் படிக்கட்டு வழியாக ஏறித்தான் 2வது தளத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்குள் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் கதவு உள்பக்கமாக தாழப்பாள் போடப்பட்டிருந்தாலும், பால்கனி வழியாக நுழைந்து உள்ளே குதித்து பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகிறார்கள். .தொடர் விசாரணை நடந்து வருகிறது.. ஆனால் லாக்டவுன் சமயத்திலும் இப்படி ஒரு கொடூர சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.