ஜம்மு காஷ்மீர் பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

இந்தியா பொது தகவல்கள்
miltry 1

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டம் வான்போரா பகுதியில் பயங்கர்வாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே வான்பூராவில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய குழுக்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சந்தேகப்பட்ட இடங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் நெருங்கியபோது அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இது குறித்து ஜம்மு கஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வான்போராவில் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல் கிடைத்ததும் இராணுவத்தின் இஸ்த் ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎஃப் கூட்டுக் குழு அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
சந்தேகத்திற்கிடமான இடத்தை நோக்கி படைகளின் கூட்டுக் குழு நெருங்கியபோது, அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாகி சூடு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படியினரும் பதிலடி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் துப்பாக்கிசூடு நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.